விக்னேஸ்வரனின் ராஜபக்ஷக்கள் ஆதரவு நிலைப்பாடு: கூட்டணிக்குள் குழப்பம்!

Date:

ராஜபக்ஷக்களின் வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை விக்னேஸ்வரன் தனித்தே எடுத்தார். அவர் கூட்டணிக்குள் கலந்துரையாடவில்லை என்ற அதிருப்தி தமிழ் மக்கள் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது.

தமிழ் பக்கத்துடன் பேசிய கூட்டணி கட்சிகளின் பிரமுகர்கள், ராஜபக்ஷ தரப்பை ஆதரிக்கும் முடிவு குறித்து தம்முடன் கலந்துரையாடவில்லையென தெரிவித்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கக்கூடாது என்பதை அவருக்கு பல தடவை கூறியிருந்தோம். எனினும், அதை பொருட்படுத்தாமல் அவர் முடிவெடுத்துள்ளார். பல விவகாரங்களில் அவர் இவ்வாறு முடிவெடுப்பதால், இது குறித்து அவருடன் தெளிவான கலந்துரையாடலை விரைவில் நடத்த எதிர்பார்க்கிறோம் என்றனர்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்