சூரிய மண்டலம் இருக்கும் பால்வெளி மண்டலத்திற்கு அருகிலுள்ள இன்னொரு மண்டலத்தில் விசித்திரமான கருந்துளை (Black hole) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருந்துளை விண்வெளியில் உள்ள மர்மமான அம்சங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.
ஒளி உள்பட அதன் எல்லைக்குள் செல்லும் எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ள ஒரு பகுதிதான் அது.
பெரும் நட்சத்திரங்கள் இறுதிக்கட்டத்தை அடையும்போது அவை supernova எனும் ஒருவகை வெடிப்புக்குள்ளாகின்றன. அப்போது கருந்துளைகள் உருவாகின்றன.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை supernova வெடிப்புக்குள்ளாகவில்லை என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கருந்துளைகள் வழக்கமாக வெளியிடும் X-ray கதிரியக்கம் இம்முறை இடம்பெறவில்லை.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை சூரியனைவிட 9 மடங்கு பெரியது.
அது பூமியிலிருந்து சுமார் 160,000 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 9.5 டிரில்லியன் கிலோமீட்டர்களாகும்.
கருந்துளையுடன் இணைந்து ஒரு நட்சத்திரமும் வட்டப்பாதையில் வருவதாகக் கூறப்படுகிறது.
அதுவும் காலப்போக்கில் இன்னொரு கருந்துளையாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.