மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்ப்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் தனி வீட்டு திட்டத்தில் கூரை தகடுகள் களவாடப்பட்டுள்ளதாக நேற்று (18) மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை அவ்வழியே தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் குறித்த வீட்டின் கூரை கழற்றப்பட்டுள்ளதை கண்டு தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தோட்ட நிர்வாகத்தால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த வீடமைப்பு திட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு கள் களவாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த வீடமைப்பு திட்டம் கடந்த 2018 ஓகஸ்ட் மாதம் 28 ம் திகதி முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பிறகு பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
-ஞானராஜ்-