24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு மீது பொலிஸ் தாக்குதல்: வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸ் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்த போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் மதகுரு ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு பதட்ட நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனியா, மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட மதகுருவிடம் மன்னிப்பு கேட்டதற்கு இனங்க ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

Leave a Comment