தற்போது சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேற்படி ஆவணங்களை ஆராய்ந்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ரஞ்சனின் விடுதலை தொடர்பான தனது பரிந்துரையை வழங்கவுள்ளதாக அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரஞ்சனின் விடுதலை தொடர்பில் தனது பரிந்துரையை சமர்ப்பித்ததன் பின்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி தீர்மானத்தை எடுப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1