தலைமன்னாரில் காணாமல் போன 2 மீனவர்கள் மீட்பு: ஒருவர் மாயம்!

Date:

தலைமன்னார் பியர் கடற்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களில் இரு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

ஒரு மீனவர் காணாமல் போயுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி தலைமன்னார் பியர் மீன்பிடி துறையில் இருந்து கண்ணாடி இழைப்படகில் மூன்று மீனவர்கள் மதியம் 12 மணி அளவில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

படகில் இருந்து வலையை விடும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்துள்ளது.

இதன் போது மீனவர்கள் மூவரும் கடலில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய படகைப் பிடித்தவாறு மீனவர்கள் நீண்ட நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று சனிக்கிழமை 16ஆம் திகதி மாலை மீன்பிடி தொழிலுக்காக வந்திருந்த இந்திய இழுவைப் படகின் உதவியுடன் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டு கச்சதீவு கடற்கரையினை அண்மித்த தூரத்தில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கச்சதீவு கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இரு மீனவர்களையும் மீட்ட கடற்படையினர் சிகிச்சை வழங்கிய நிலையில், சக மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கிழக்கு கேபிள் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராஜி ஜெனாத் (வயது 27) மற்றும் ராஜ மூர்தி மோகன்ராஜ் ( 50).ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதே பகுதியை வதிவிடமாக கொண்ட ராசதுரை ராஜசேகர் (52.)என்ற மீனவர் காணாமல் போயுள்ளார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்