தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று (16) இடம்பெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான த.சித்தார்த்தனால் கழகத்தின் கொடியேற்றப்பட்டு, தீபச்சுடரும் ஏற்ப்பட்டிருந்தது.
அத்துடன் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களான வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் க.சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், கஜதீபன், வவுனியா உள்ளூராட்சி மன்ற தலைவர்களான சு. ஜெகதீஸ்வரன், த.யோகராஜா, நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
