26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

பாதிக்கப்பட்டவர்களிற்கு அவசர நிவாரண வேலைத்திட்டம்!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மேலும், ஓகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் நிவாரண பட்ஜெட்டில் இருந்து கூடுதல் தொகையை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைதியான போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட திட்டம் நல்லதொரு திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

Leave a Comment