அரசியலமைப்பின் 37(2) சரத்தை பின்பற்றுமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் எதிர்ப்பினால் நாட்டை விட்டு வெளியேறி நாட்டை அராஜகத்திற்கு இட்டுச் சென்றதாகவும், நாடு ஜனநாயக விரோத சக்திகள் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு வழிவகுத்ததாகவும், அடக்குமுறை மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு வழிவகுத்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் அவர் ஜனநாயகத்தை மதிக்காத ஒரு தலைவராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டத் தவறிய தலைவராகவும் தெளிவாகக் காட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கோட்டாபய ராஜபக்ச தனது இதுவரையான நடவடிக்கைகளின் அடிப்படையில் நாட்டை விட்டு வெளியேறியமை, அடுத்த ஜனாதிபதி நியமிக்காமல் தப்பிச் சென்றமை உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளுமாறு பிரதம நீதியரசரிடம் எம்.பி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை கைவிடுவதற்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என்றும் அது பொதுமக்களின் விருப்பத்திற்கு முரணானது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 37 வது சரத்தின் பிரகாரம் பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர பிரதம நீதியரசரிடம் கோருகின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை, மக்களுக்கு விரோதமானது என கைவிட்டதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ணில் விக்கிரமசிங்க சட்டவிரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜயசேகரவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பிரதமருக்கு ஆசைப்பட்டு பதவி தொடர்பான பணிகளைச் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த வகையிலும் நாட்டின் தலைவராக பணியாற்ற முடியாது என பிரதம நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




