ஹட்டனின் ஐ.ஓ.சி. எரிவாயு நிலையத்தில் டீசலை பெற்றுக்கொண்டு சென்று, கொள்கலனில் சேமித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனின் ஐ.ஓ.சி. எரிவாயு நிலையத்திற்கு 12 நாட்களின் பின்னர் 6600 லீற்றர் டீசல் வழங்கப்பட்டது. வாகனங்களிற்கு டீசல் வழங்கப்பட்ட போது, சாரதிளொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாகனத்தை டீசல் நிரப்ப வந்திருந்தார்.
சந்தேகமடைந்த பொலிசார் அவரை பின்தொடர்ந்த போது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கொள்கலனில் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த போது கைது செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1