நூற்றுக்கணக்கான இராணுவ மற்றும் விமானப்படை துருப்புக்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன ஒளிபரப்பு சேவை (ITN) ஆகியவற்றில் நிறுத்தப்பட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து நாளைய தினம் நாட்டுக்கு அறிக்கையொன்றை வழங்குவதற்காக காலி முகத்திடல் போராட்டத்தை சேர்ந்த குழுக்கள் நேரடி ஒளிபரப்பு கோரியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன ஒளிபரப்பு சேவை ஆகியவற்றின் நிர்வாகத்தை அணுகிய சிலபோராட்டக்குழுக்கள், அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்பும் அறிக்கைகளை நாளை நேரலையில் ஒளிபரப்புமாறு கோரியதாகவும் உள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் இரு நிர்வாகங்களும் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டன.
இந்த இரண்டு ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நூற்றுக்கணக்கான துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.