25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

‘ஜேவியின் சேவை இலங்கைக்கு தேவை; இது என் தனிப்பட்ட கருத்து’: அமெரிக்க தூதர்!

அனுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இலங்கையில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கட்சி ஜே.வி.பி என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மிகவும் பயனுள்ள மற்றும் நேர்மையான கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜூலி சங் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முதலீடு மற்றும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அல்லது விளக்கம் தேவைப்பட்டால், தமக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்குமாறு அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்ததாக ஜூலி சுங் தெரிவித்தார். அப்போது சமூக வலைதளங்கள் மற்றும் வதந்திகள் மூலம் பரப்பப்படும் பொய்யான தகவல்களில் இருந்து விலகி இருக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

கடந்த காலங்களில் ஜே.வி.பி.யுடன் சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் இருந்த போதிலும், அமெரிக்காவின் பிரதிநிதியாக அல்லாமல் தனிப்பட்ட நபராக அனுரகுமார திஸாநாயக்கவை சந்திப்பது தனது கடமையாக கருதுவதாக தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

அந்த சந்திப்பில், ஜே.வி.பி இலங்கைக்கு தேவையான அரசியல் கட்சியாக தான் கருதுவதாகவும், ஜே.வி.பி அவர்களின் சித்தாந்தங்களை சமூகமயமாக்கும் என்றும் கூறிய அவர், இது அமெரிக்காவின் கருத்து அல்ல என்றும் தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

Leave a Comment