இந்த நேரத்தில் நாட்டின் அரசாங்கத்தை ஒப்படைத்தால் பொறுப்பேற்கத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.
அநுரகுமார மேலும் தெரிவிக்கையில், ‘நாங்கள் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளவர்கள், பயந்து எதையும் விட்டுவிடாதவர்கள்’ என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்று பிரதிநிதிகள் மட்டுமே இருப்பதால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பான வாக்கெடுப்பு நடந்தால், வேறு யாராவது ஜனாதிபதி மற்றும் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது.
மக்களது விருப்பத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் முரண்பாடு உருவாக்கப்பட்டுள்ளதால், மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1