அதிமுக செயற்குழு கூட்டம் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. இதில் பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
முதலில் காலை 9.15 மணிக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டம் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. சரியாக 9.25 மணிக்கு செயற்குழு நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் செல்லத் தொடங்கினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1