25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

வவுனியாவில் எரிபொருள் வரிசையில் நின்றவர் மரணம்!

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்று விட்டு இளைபாறுவதற்காகச் சென்றவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

இன்று (11) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக காவல் நின்றுள்ளார்.

இன்றும் (11) பெற்றோல் கிடைக்காமையால் நீண்ட நேரம் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காக நகரசபை முன்பாக உள்ள கடைப் பகுதிக்கு சென்ற போது குறித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை அருகில் நின்ற மோட்டர் சைக்கிளில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்தவர் வவுனியா நகரசபையில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் வவுனியா, கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் செல்வகுமார் (வயது 44) என்பவராவார். மரணமடைந்தவரின் மோட்டர் சைக்கிள் பெற்றோல் வரிசையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை!

Pagetamil

Leave a Comment