சனிக்கிழமை (9) இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, மஹரகம நகரில் போராட்டக்காரர்களிற்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் இன்று அதிகாலை கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது கூரிய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சார்ஜன்ட் ஹோமாகம, மாகமனையில் உள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் கராஜில் கடமையாற்றியவர்.
அவரிடமிருந்த 10 அங்குல நீளமும் 2 அங்குல அகலமும் கொண்ட ஆயுதத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் சீருடையில் செருப்பு அணிந்திருந்த நபர் மீது இராணுவ அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் நடத்திய சோதனையில் கூரிய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக சார்ஜன்ட் கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1