ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என இலங்கை ஆட்சியாளர்களிடம் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் செய்தியில்-
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின் துக்கத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன். நாட்டின் ஆயர்களுடன் சேர்ந்து, அமைதிக்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கிறேன், ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
I unite myself to the sorrow of the people of Sri Lanka who continue to suffer the effects of political and economic instability. Together with the country's Bishops, I renew my appeal for peace and I implore those who have authority not to ignore the cry of the poor.
— Pope Francis (@Pontifex) July 10, 2022