எரிபொருள் இறக்குமதி தொடர்பான புதிய தகவல்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ளார்.
அவரது ருவிற்றர் பதிவின்படி,
15-17ஆம் திகதிகளிற்குள் வரும் டீசல் கப்பலிற்கும், 22-24 ஆம் திகதிகளிற்குள் வரும் பெட்ரோல் கப்பலிற்கும் மத்திய வங்கியின் உதவியுடன் எரிசக்தி அமைச்சினால், ஐஓசி நிறுவனத்திற்கு முழுமையான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
15-17 ஆம் திகதிகளிற்குள் வரும் டீசல் கப்பலிற்கும், 17-19 ஆம் திகதிகளிற்குள் வரும் பெட்ரோல் கப்பலிற்கும் கடந்த வாரம் முன்பணம் செலுத்தப்பட்டது. டீசலுக்கான இருப்புத்தொகையை இன்று செலுத்த வேண்டும். பெட்ரோலுக்கு மீதித் தொகையை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செலுத்த வேண்டும்.
மேலும் 3 கப்பல்கள் கொழும்பிற்கு வரும், 12-15 ஆம் திகதி டீசல், 14-16 ஆம் திகதி கனரக எரிபொருள் எண்ணெய் மற்றும் 15-17 ஆம் திகதி கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் வரும். அவை வந்தவுடன் பணம் செலுத்தப்பட வேண்டும்.
9 ஆம் திகதி எரிபொருள் ஏற்றியபடி வரவிருந்த கப்பல் வானிலை காரணமாக தாமதமானது. சரியான நேரத்தில் ஏற்ற முடியவில்லை. அந்த கப்பல் இன்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டதாக விநியோகத்தர் தெரிவித்தார். அது 12-15 ஆம் திகதிகளில் வந்தடையும்.
1) On Friday, full payments were made with the assistance of @CBSL & MOF to IOC for a Diesel Cargo to arrive 15-17 & a Petrol Cargo for 22-24. Advance payments were made last week for a Diesel cargo to arrive 15-17 & Petrol 17-19. Balance payment to be made today for the Diesel.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 11, 2022