அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும், இலங்கை வீரர் பதும் நிஸ்ஸங்க கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
நிஸ்ஸங்கவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு நேற்று காலை (10) நடத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையின் போது நேர்மறை சோதனை நடந்ததாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
நிஸ்ஸங்கவுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தொற்று உறுதியானது.
தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மாற்று வீரராக ஓஷத பெர்னாண்டோ விளையாடும் லெவன் அணியில் இணைவார்.
ஓல்-ரவுண்டர் தனஞ்சய டி சில்வா, சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ ஆகியோரும் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடந்த சில நாட்களில் இலங்கை அணியில் 6 பேர் கொரொனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இதில் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் இதற்கு முன்னர் நேர்மறை சோதனை செய்தனர்.
மத்யூஸ் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்துவிட்டு 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.