யாழ்ப்பாணம், சங்கானையில் வீட்டிலிருந்து காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அராலி வீதி, சங்கானையை சேர்ந்த 81 வயதான கந்தையா அன்னம்மா என்ற மூதாட்டியின் சடலமே மீட்கப்பட்டது.
அராலி வீதி, சங்கானை என்ற முகவரியை சேர்ந்த இந்த மூதாட்டி நேற்று காலை முதல் காணாமல் போயிருந்தார்.
பின்னர், வீட்டிற்கு அண்மையாக உள்ள பொது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1