காவல்துறை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் ரயில்கள் இயக்கப்படாததால் காலையில் ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிகளவான பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி புகையிரத நிலையத்திற்கு வந்த பயணிகளின் கொந்தளிப்பு காரணமாக புகையிரதம் ஒன்று பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலி ரயில் நிலையத்தில் இன்று (09) காலை கடும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புகையிரதத்தில் கொழும்பு செல்ல பெருமளவான மக்கள் வந்திருந்த போதிலும் இன்று புகையிரதங்கள் எதுவும் இயங்காத காரணத்தினால் மக்கள் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி மற்றும் மாத்தறைக்கு இடையில் புகையிரதங்கள் இயங்கினாலும் கொழும்பு நோக்கி புகையிரதங்கள் இயங்காத காரணத்தினால் காலி புகையிரத நிலையத்தில் கடும் கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது.
கொழும்புக்கான புகையிரத சேவையை இடைநிறுத்துமாறு மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக நிலைய அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அறிவுரை கூறியது யார் என்று கூற மாட்டோம் என்கின்றனர் கூடியிருந்தவர்கள்.
எனினும் திரண்டிருந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்புக்கு விசேட புகையிரதத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.