வாடகை கொடுக்காததால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட பெண்: ஊருக்கு செல்ல எரிபொருள் இல்லாமல் மாற்று திறனாளி மகனுடன் மரத்தடியில் வாழ்ந்த அவலம்!

Date:

வீட்டு வாடகை செலுத்த முடியாததால் வீட்டு உரிமையாளரால் வெளியேற்றப்பட்ட பெண், தனது சொந்த ஊருக்கு செல்ல எரிபொருள் இல்லாததால் தனது மாற்றுத் திறனாளி மகனுடன் சில நாட்களாக மர நிழலில் தங்கியிருந்துள்ளார்.

நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் மரத்தடியில் வசித்து வந்த தாய் மற்றும் அவரது ஊனமுற்ற மகனுக்கு வெயாங்கொட இராணுவ முகாமின் அதிகாரிகள் உதவி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பஸ்யால பிரதேசத்தில் வாடகை வீட்டில் ஊனமுற்ற குழந்தையுடன் வசித்து வந்த இப் பெண்ணின் கணவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் வருமானமில்லாததால்,  வீட்டின் மாதாந்த வாடகையை செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.

ஒரு மாத வாடகையை செலுத்தவில்லையென கூறி, வீட்டு உரிமையாளர் அவரை வெளியேற்றி விட்டார்.

பாய், சில உடைகள், பொருட்களுடன் வீட்டை விட்டு வெளியேற்றி நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்து மரத்தடியில் வசித்து வந்துள்ளார்.

இந்த பெண்ணின் சகோதரர் காலியில் வசிக்கிறார். தற்போதைய நிலைமையில் காலிக்கு பொருட்களுடன் அவரால் செல்ல முடியவில்லை. எரிபொருள் இல்லாததால் வாகனமொன்றை பெற முடியவில்லை.

பல நாட்களாக, நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் தங்கியிருந்த இந்த தாய், பிள்ளைக்கு பிரதேசவாசிகளின் உணவு வழங்கி வந்தனர்.

இது தொடர்பில் வெயாங்கொட இராணுவத்தினர் அறிந்ததும்,  அவர்களின் முயற்சியால் காலி பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு அந்த பெண்ணும், குழந்தையும் செல்ல முடிந்தது.

நிட்டம்புவ நகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் சிலரின் தலையீட்டின் பேரில், வாடகை லொறி ஒன்று அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, தாயும், மகனும் காலி பகுதிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது நிட்டம்புவ – வெயாங்கொட பிரதேசத்தில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் இல்லை, ஆனால் வெயாங்கொட இராணுவ முகாம் தளபதியின் தலையீட்டினால் நிட்டம்புவ ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளிற்காக வழங்க சேமிக்கப்பட்ட எரிபொருளில் இருந்து, எரிபொருளை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்