ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் காயம்

Date:

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். நரா நகரில் இச்சம்பவம் நடந்தது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அபேவின் மார்பில் இரண்டு குண்டுகள் வரை பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார், மார்பில் இருந்து ரத்தம் வழிந்தது.

ஷின்சோ அபே, நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. 67 வயதான அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுடப்பட்டார்.

நாரா நகரில் வசிக்கும் 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரே துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஓகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் அளித்தப் பேட்டியில், “நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை என் உடல்நிலை எனக்கு அளிக்கவில்லை. ஆகையால் நான் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று கூறி ராஜினாமா” செய்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்