26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

காயத்தால் அவதி: விம்பிள்டன் அரையிறுதியிலிருந்து விலகினார் நடால்!

நடப்பு விம்பிள்டன் தொடரின் ஒற்றையர் ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டியில் விலகியுள்ளார் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர் ரபேல் நடால். காயத்தால் அவதிப்பட்டுவந்த அவர், அதில் இருந்து மீளாத நிலையில் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, காலிறுதியில் அவர் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிராக விளையாடி இருந்தார். இந்த போட்டியில் நடால் 3-6, 7-5, 3-6, 7-5, 7(10)-6(4) என்ற செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் இருந்து விலகும்படி அவரது அணியினர் வற்புறுத்தியதை போட்டி முடிந்ததும் வெளிப்படுத்தி இருந்தார் நடால். அதேபோல், “நான் அரையிறுதியில் விளையாடுவேனா என தெரியவில்லை” என்றும் பேசியிருந்தார்.

நாளை அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் எதிர்த்து அரையிறுதியில் விளையாட உள்ள நிலையில், சிலமணிநேரம் முன்பு இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடால் விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போதே மிகவும் சோர்வாக காணப்பட்ட நடால், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான நடால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மொத்தம் 22 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் உலகில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் நடால். நடப்பு அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடரின் சாம்பியனும் அவர் தான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment