கணவர் வெளிநாட்டில்: கள்ளக்காதலால் உருவான சிசுவின் சடலத்தை கணவன் வீட்டிற்கு அனுப்பிய 20 வயது மனைவி: திருமலையில் சம்பவம்!

Date:

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளை மணல் சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் தகாத உறவினால் கருவான ஆறு மாத சிசு பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சீனக்குடா வெள்ளை மணல் சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீட்டிலே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

என்.றிஸ்மியா (20) என்பவரை திருமணம் முடித்த கணவர் வெளிநாடு சென்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த நிலையில் கிண்ணியா குறிச்சாங்கேணி பிரதேசத்தில் தனது தாயின் வீட்டில் றிஸ்மியா வசித்து வந்தார்.

அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் றிஸ்மியாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டு, கருவுற்றுள்ளார். கருவை கலைப்பதற்காக பல முயற்சிகள் செய்து வந்த நிலையில், கரு ஆறு மாத காலம் அடைந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தனது தாயின் வீட்டில் சடலமாக பிரசவித்துள்ளார்.

பின்னர் குறித்த சிசுவை பழைய துணிகளால் சுற்றி ஒரு பையினுள் வைத்து தனது கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் மூன்று நாட்களின் பின்னர் குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து குறித்த பெண்ணின் கணவரின் தாயாரினால் பெண் அனுப்பிவைத்த பையினை சோதனை செய்து பார்த்தபோது துணிகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்து சிசு காணப்பட்டதாகவும் பின்னர் குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பிரசவித்த சிசுவின் உடல் பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரவ்பீக் பாயிஸ்

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்