கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் 67 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
67 பேர் கொண்ட குழுவை ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இன்று காலை கல்முனையில் ரோந்து சென்று கொண்டிருந்த போது கடற்படைக் கப்பலான ‘ரணரிசி’ இடைமறித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 53 ஆண்கள், 6 மனித கடத்தல்காரர்கள், 6 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் உள்ளனர்.
பலநாள் மீன்பிடி இழுவை படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1