பிறப்பு விகிதத்தை உயர்த்த பாடுபடும் எலோன் மஸ்க்: நிறுவன பெண் அதிகாரி இரட்டை குழந்தை பிரசவித்தார்!

Date:

உலகின் முன்னணி பணக்காரரான எலோன் மஸ்க் (51) தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிறப்பு விகிதங்களை உயர்த்த உதவுவதாக எலோன் மஸ்க் வியாழக்கிழமை தெரிவித்தார்.

“சரிந்து விழும் பிறப்பு விகிதம் இதுவரை நாகரிகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து” என்று மஸ்க் மேலும் கூறினார்.

டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய 36 வயதான கனேடியuான சிவோன் சிலிஸ், 2019ஆண் ஆண்டில் நியூராலிங்கில் சேர்ந்துள்ளார். மேலும், டுவிட்டர் நிறுவனத்துடன் மஸ்க்கின் ஒப்பந்தம் நிறைவடைந்த பின், டுவிட்டர் நிறுவனத்தை ஷிவோன் முன்னின்று நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில், சிலிஸ் மற்றும் மஸ்க் டெக்சாஸ் நீதிமன்றத்தில் குழந்தைகளுக்கு “தங்கள் தந்தையின் கடைசி பெயரைக் கொண்டிருப்பதற்கும், அவர்களின் நடு பெயரின் ஒரு பகுதியாக தங்கள் தாயின் கடைசி பெயரைக் கொண்டிருப்பதற்கும்” ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன்,  மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலோன் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்