ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ர மாசிங்க ஆகியோரை பதவியில் இருந்து விலகுமாறு கோரி இன்று (6) காலை பலப்பிட்டி நகர மையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் எரிபொருள், எரிவாயு கிடைக்காமல், பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அசௌகரியத்தை சந்தித்துள்ளதாகவும், அதற்கு பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவியை விட்டு வெளியேற வேண்டும் என கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டமாக சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1