கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 11 பேருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் வீதியை மறித்த குற்றச்சாட்டின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று (5) காலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியே வருமாறு வலியுறுத்தி ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை மூடினர்.
ஜனாதிபதி அந்த இடத்திற்கு வருமாறு கூறியதுடன், அதுவரை வாயில் முன் காத்திருப்போம் என தெரிவித்தனர்.