40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு விலையும், கொமிஷனும் கொடுக்க இலங்கை ஒப்புக்கொள்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று குற்றம் சாட்டினார்.
“கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், 40,000 மெட்ரிக் தொன் ஏற்றுமதிக்கு 700 மில்லியன் ரூபா கமிசன்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கும், திருடர்களுக்கும் மகத்தான விலைகளை வழங்க இலங்கை ஒப்புக்கொள்கிறது” என்று ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் நேற்றைய தினம் பிரசன்னமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெற்றோலியகூட்டுத்தாபன அதிகாரிகளை COPE சந்திக்கும் வகையில் நேரத்தைச் சரிசெய்யவும், “கோப் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்,” என்று பிரதமர் கூறினார்.