அநுராதபுரம் நகரில் தனியார் மருந்தகத்தை நடத்தி வந்த வைத்தியர் ஒருவர் 2260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அனுராதபுரம் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புபுதுபுர பிரதேசத்தில் தனியார் மருந்தகத்தை நடத்தி வரும் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 67 என்று போலீசார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின்படி, வைத்தியர் பயணித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸ் உத்தியோகத்தர் கையால் சைகை செய்துள்ளனர். வாகனம் நிற்காததால், அவரை துரத்திச் சென்று, அவரது வீட்டின் முன் வாகனம் நிறுத்தப்பட்டபோது, சுற்றிவளைத்தனர்.
வாகனத்திலிருந்து ஹெரோயின் பார்சல் கைப்பற்றப்பட்டது.
வைத்தியராகக் காட்டிக் கொண்டவர் 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டவர் எனவும், அவர் இதற்கு முன்னர் அனுராதபுரம் பிராந்திய சுகாதார பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.