பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற வாய்ச் சண்டையினால், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையை இடைநிறுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை பற்றிய உரைக்கு பின்னர், ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலைப் பொருட்படுத்தாமல் கருத்து தெரிவித்த பிரதமருக்குப் பதிலளிக்க தமக்கு உரிமை உண்டு என சஜித் வலியுறுத்தினார்.
சஜித்- “நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து பேசி முடித்த பிரதமர் தோல்வியடைந்துள்ளார். எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான நீண்ட வரிசையில் அவர் தீர்வைக் கொண்டு வரவில்லை. விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே கட்டார் தொண்டு நிதியை தடை செய்தது. இப்போது அரசாங்கம் எரிபொருள் வாங்க பிச்சைக் கிண்ணத்துடன் செல்கிறது”.
ரணில் – “கத்தாரில் இருந்து எரிபொருளை வாங்க முடியாது. எரிபொருள் உள்ள நாடுகளிடம் இருந்து எரிபொருளை வாங்குவதற்காக பிரேமதாசவின் தந்தையினால் நான் அனுப்பப்பட்டேன்.”
சஜித் – “எனது தந்தை விக்கிரமசிங்கவை தனது 200 ஆடைத்தொழிற்சாலை திட்டத்தின் தலைவராக்கினார். எனது தந்தைதான் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்புகளை வழங்கினார்.”
ரணில் – “ஜனாதிபதி பிரேமதாசவின் அமைச்சரவையில் நான் ஒருபோதும் ஆடைத்தொழில் துறை அமைச்சராக இருந்ததில்லை. உ.பி. விஜேகோன் ஆடைத் தொழிலுக்குப் பொறுப்பாக இருந்தார். சஜித்துக்கும் மற்றவர்களுக்கும் எப்படி அதிகாரத்தை கைப்பற்றுவது என்று தெரியவில்லை. ஒருவர் அதிகாரத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும், பின்னர் அதைப் பிடிக்க வேண்டும். பதாகைகளை பிடித்துக்கொண்டு ஆட்சிக்கு வர முடியாது. பிரேமதாச மற்றும் பிறரை என்னுடன் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன், அவர்களுக்கு அரசியல் பாடம் கற்பிப்பேன்.
சஜித் – “விக்கிரமசிங்க நன்றாக பாடம் படித்திருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். அவரது கட்சி ஒன்றுமில்லாமல் போய்விட்டது, அவர் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வர முடிந்தது. இப்போது பின்கதவினால் பிரதமரானார்.”
ரணில் – “பிரேமதாசவின் தந்தையை பதவி நீக்கத்தில் இருந்து காப்பாற்றியது நான்தான்.”