அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Pasco வட்டாரத்தில் இராட்சத ஆபிரிக்க நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த வட்டாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
20.3 சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய இராட்சத ஆப்பிரிக்க நத்தைகள் விரைவில் பெருகிவரும் நிலையில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவை ஆண்டுக்கு 2,500 முட்டைகள் வரை உற்பத்தி செய்யக்கூடியவை என்பதால் நத்தைகளைக் கட்டுக்குள் வைப்பது சிரமம்.
அத்துடன் அவ்வகை நத்தைகள் மனிதர்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை.
அவற்றிடம் உள்ள rat lungworm எனும் ஒட்டுண்ணி, மனிதர்களுக்கு meningitis எனப்படும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தவகை நத்தைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், பலர் அதை மீறி வளர்க்கிறார்கள். செல்லப்பிராணியாக அதை வளர்த்தவர்கள் காட்டுக்குள் வீசியதால் அல்லது அவர்களிடமிருந்து நத்தைகள் தவறிச் சென்று விரைவாக பெருகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தனிமைப்படுத்தல் ஜூன் 25 முதல் அமலுக்கு வந்தது, மேலும் குடியிருப்பாளர்கள் நத்தை அல்லது தாவரங்கள் மற்றும் மண் போன்ற தொடர்புடைய பொருட்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் அல்லது வெளியே கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
நத்தையை கண்டவர்கள் உடனடியாக அறிவிப்பதற்கு ஹொட் லைன் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நத்தைகளை 3 வருடங்களிற்குள் அழிக்கும் வேலைத்திட்டத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். நத்தைகளை வேட்டையாடுதல், நிலத்தில் ஒரு வகை பூச்சிக்கொல்லி விசுறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.