லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி கொலை தொடர்பில் அவரது கணவர் இன்ற (5) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடாரியால் தனது மனைவியை அவர் அடித்து படுகொலை செய்ததாக லங்காபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் தல்பொத்த லங்காபுர வீட்டில் வசித்து வந்த நிர்வாக உத்தியோகத்தரான திருமதி யமுனா பத்மினி (41) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
வீட்டின் மாடி அறையில் தூங்கிய இரண்டு பிள்ளைகளின் தாயான அவர் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.
யாரோ வீட்டுக்குள் புகுந்து மனைவியை வெட்டியதாகவும், அவர்களுடன் தான் போராடியதாகவும் கணவன் தெரிவித்திருந்தார்.
எனினும், கணவனின் வாக்குமூலத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து நடந்த தொடர் விசாரணையில், கணவன், இன்னொருவருடன் இணைந்து கொலை செய்தது தெரிய வந்தது.
குடித்துவிட்டு வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், கடனை அடைக்குமாறும் மனைவி அவரை திட்டியுள்ளார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கோடரியால் தாக்கியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.