தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 30 வருடங்களாக முயன்று தோல்வியுற்ற ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை வருடங்களில் சாதித்துவிட்டார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
“வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்த விரும்பினார். அதனால்தான் அவர் கொழும்பில் தாக்குதல்களை நடத்தினார். பல செயல்களை செய்தார். ஆனால், பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டரை வருடங்களில் செய்துள்ளார் என்பதை நாம் இப்போது புரிந்து கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.