25.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

திருக்கேதீச்சரத்தில் 28 அடி உயர சிவன் சிலை, நாவலர் சிலை திறப்பு!

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(3) காலை 7 மணியளவில் இடம் பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய தினம் (3) திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் ஆறுமுக நாவலருக்கான சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள் நுழையும் வீதியில் சுமார் 28 அடி நீளமான சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் நாளை திங்கள் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நிறைவடையும்.

பின்னர் கிரிகைகள் இடம் பெற்று 6 ஆம் திகதி புதன்கிழமை காலை சுப முர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

கிளிநொச்சியில் கொதித்தெழுந்த சிவசேனை

Pagetamil

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

Leave a Comment