திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மூலம் தீ பரவியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்..
அத்துடன் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ரவீந்திரன் சுதாசினி (47) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் நேற்று பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை கீழே வீசிய போது அந்த அறைக்குள் இருந்த பெற்றோல் போத்தல் மீது விழுந்தமையால் தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளின் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அரை போத்தல் பெற்றோல் மட்டுமே பூஜை அறைக்குள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.