நாளை முதல் அமுலுக்கு வரவுள்ள திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் பற்றிய விபரம் இன்று வெளியிடப்படும்.
புதிய பேருந்து கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம மற்றும் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா ஆகியோர் அறிவிக்கவுள்ளனர்.
செவ்வாய்கிழமை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்தது.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அண்மைய எரிபொருள் விலைத் திருத்தம் காரணமாக 30 சதவீத பேருந்துக் கட்டண உயர்வு தேவைப்படுவதாக பேருந்து சங்கங்கள் அறிவித்தன.
மேலும் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1