வைத்தியர்கள் உட்பட நிக்கவெரட்டிய வைத்தியசாலை ஊழியர்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.
தமது வாகனங்களிற்கு வீதியில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவித்த வைத்தியசாலை ஊழியர்கள், கொள்கலன்களுடன் எரிபொருளுக்கு சென்றனர். ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்குவதற்கு உடனடியாக எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு எரிபொருளை விநியோகிக்க உரிய முறைமை இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்களுக்கும் பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
வைத்தியசாலையின் அத்தியாவசிய பராமரிப்பு சேவைகள் மாத்திரமே இயங்கி வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் செயற்பாடுகளை பேணுவதற்கு ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதனால் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு பாதிக்கப்பட்டிருந்தது.