அமெரிக்காவில் 46 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் 46 பேர் சடலமாக கிடந்தனர்.
மேலும் 16 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 12 பெரியவர்களும், 4 குழந்தைகளுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மெக்சிகோ உள்ளிட்ட தென்னமெரிக்கா நாடுகளில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட இருவர் குவத்தமாலாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
டெக்சாஸ் நேரப்படி மாலை 5 மணியளவில் ட்ரக்கிற்குள்ளிருந்து உதவிக்குரல் ஒன்றை கேட்ட தொழிலாளியொருவர், ட்ரக்கிற்கு அருகில் சென்றுள்ளானர். ட்ரக்கின் பின் கதவு பகுதியிளவில் திறந்து காணப்பட்டது. உள்ளே எட்டிப்பார்த்த போது, இறந்த உடல்கள் காணப்பட்டன. ஒரு உடல் டிரக்கிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டதாக சான் அன்டோனியோ காவல்துறைத் தலைவர் வில்லியம் மக்மனஸ் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சான் ஆண்டோனியோ பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் இருந்து மெக்சிகோவுக்கு சமீப காலமாக குடிபெயர முயற்சித்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கினர். அதுவும் எல்லையைக் கடக்க டிரக்கில் வருபவர்கள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது.
மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 650 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்கதையாக உள்ளது.