இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்று முன்தினம் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 57 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, பக்கத்து வீட்டு முதியவர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார்.
தாயார் இந்த விடயம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முதியவரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1