நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் இருந்த போதிலும், ஓர்டர்கள் தாமதமாகி வருவதால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இணைச் செயலாளர் சாந்த சில்வா, மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது லங்கா ஐஓசி சில மாவட்டங்களுக்கு எரிபொருளை விநியோகித்துள்ளதாகத் தெரிவித்த அவர், லங்கா ஐஓசி நிறுவனத்திடமிருந்து 10,000 மெட்ரிக் தொன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் வராததால் பவுசர் நடத்துனர்களும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சில்வா குறிப்பிட்டார்.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எண்ணெய் கொள்கலன்களில் இருந்து நேற்றைய தினம் ஒரு எரிபொருள் பௌசர் கூட அனுப்பப்படவில்லை எனவும், இன்று சில பவுசர்களே நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.