திருகோணமலையில் எரிபொருளை பதுக்க முற்பட்ட எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதையடுத்து எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது.
திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிலையத்தில் இன்று பிற்பகல் முதல் பெட்ரோல் வினியோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டதாக எரிபொருள் நிலைய ஊழியர்களின அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இன்றைய தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நாட்களுக்கும் அதிகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் தருவாயில் இன்று பெட்ரோல் வினியோகம் ஆரம்பமான நேரத்தில் திடீரென அரசு ஊழியர்களுக்கும் பிரிதொரு வரிசையில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது திடீரென பெட்ரோல் தீர்ந்ததா எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அறிவித்தனர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் இன்றைய தினம் வருகைதந்த பெட்ரோல் ஒழுங்கான முறையில் விநியோகம் செய்வதற்க்கு முன்னர் எவ்வாறு தீர்ந்தது அதனை நிரூபிக்குமாறும் திருகோணமலை கண்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திருகோணமலை தலைமையக பொலிஸாரின் தலையீட்டில் பதுக்க முற்பட்ட பெட்ரோல் தொடர்பில் எரிபொருள் நிலைய ஊழியர்களிடம் கேட்டபோது நாளைய தினம் அரசு ஊழியர்களுக்கு வழங்க மீதம் வைத்ததாக தெரிவித்தனர்.
இதன்போது அவ்விடத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் இன்றைய தினமும் அரசு ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி விட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த அரசு ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க மீதம் வைத்துள்ளீர்கள் எனவும் இவ்வாறு தினமும் அரசு ஊழியர்களுக்கு என அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஒதுக்கப்பட்டு தினால் பொதுமக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருந்து எரிபொருள் இன்றி வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வாடிக்கையாளர் ஒருவர்–
இவ்வாறு அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போன்று அன்றாடம் தொழில் செய்யும் எமக்கும் உரிய முறையில் எரிபொருள் வழங்க வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் சொகுசு கார்களில் வந்து பெட்ரோல் நிரப்புவது அதனால் அவர்கள் குறித்த கார்களில் தமது பணிகளை தொடர்வது இல்லை எனவும் கார்களில் எரிபொருள் நிரப்பிவிட்டு அவர்களின் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தினால் எமது அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் எரிசக்தி அமைச்சர் நேற்று முன்தினம் எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்ததாகவும் பின்னர் இன்றையதினம் அதற்காக மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்தார் இவ்வாறு அரசாங்கம் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லை என்றால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கடந்த நாட்களில் வருகைதந்த எரிபொருள் கப்பல இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் வேறொரு நாட்டுக்கு அனுப்பப் பட்டதாகவும் இவ்வாறு வருகை தரும் கப்பல்களுக்கு செலவிடப்படும் செலவுகள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன அவர்களின் வீட்டிலிரந்து செல்வதில்லை எமது ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும் எமது ஒவ்வொருவரின் வியர்வை துளியிலும் உழைத்த பணத்தினால் செலவழிக்கப்படுகிறது எனவும் இவ்வாறான வீண் செலவுகளை தவிர்த்து மக்களுக்கு தெளிவான உண்மையான தகவல்களை வழங்கி இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் குறித்த எரிபொருள் நிலையத்தில் மிகுதி இருந்த பெட்ரோல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடர்ச்சியாக இவ்வாறு எரிபொருள் பதுக்க முற்படுவதாகவும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ் –