திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருந்தவர்களுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
நேற்று (24) அதிகாலை 3.30மணி அளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்கு எரிபொருள் வழங்காமையினால் அமைதியின்மை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்-
இரண்டு நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவில் ஈடுபடும் போது குறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த அரச ஊழியர்கள் அவ்விடத்தில் அவர்கள் தனியொரு வரிசையின் மூலமும் முப்படையினர் தனியொரு வரிசையிலும் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டமையினால் குறித்த எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ராணுவம் மற்றும் பொலிசாரின் இணக்கப்பாட்டுடன் மூவருக்கும் எரிபொருள் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டு வரிசையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருக்கும் தருவாயில் திடீரென பெட்ரோல் முடிந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் அறிவித்ததை அடுத்து அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முறையற்ற விதத்தில் இன்றைய தினம் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டமையினால் தமக்கு காத்திருந்தும் எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவித்தனர் பொது மக்கள்.
அரசினால் நாளைய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அரசு ஊழியர்கள் இவ்வாறு நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவில் ஈடுபடும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது கவலைக்குரிய விடயம் எனவும் இதன்போது தெரிவித்தனர்.
மேலும் அரசினால் அரசு ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க தனியான ஒரு எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்ததை அடுத்து இவ்வாறு அரசு ஊழியர்கள் நடந்துகொள்வது கேவலமான விடயம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்கள் எரிபொருள் கொள்வதற்காக எரிபொருள் நிலையத்திற்கு வருவதாக இருந்தால் ஏனைய பொது மக்களைப் போன்று வரிசையில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவில் ஈடுபட வேண்டும்.
எனவும் அவ்வாறு இன்றி நீண்ட நாட்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் எரிபொருள் கொள்வனவில் ஈடுபடும்போது எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்குவதை அறிந்ததன் பின்னர் தனியாக ஒரு வரிசையை உருவாக்கி அவர்கள் எரிபொருள் கொள்வனவு செய்யப்படுவது அரச ஊழியர்களுக்கும் ஒரு சட்டமாகவும் பாமரர்களுக்கு ஒரு சட்டமா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பின்னர் குறித்த சம்பவத்தில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த பொதுமக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லையென எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின உறுதி செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ் –