26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
கிழக்கு

திருமலையில் எரிபொருள் விநியோகத்திற்கு பொது முறைமை அறிமுகம்: மாவட்ட அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம விநியோகிக்கப்படும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட பொது முறைமையொன்று மாவட்டம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று (23) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றபோதே இத்தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி விரைவில் வாகனங்களின் வகைக்கேற்ப இந்த கூப்பன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த எரிபொருள் கூப்பனானது உரிய பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படும். இது குறித்து பிரதேச செயலகங்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்படும்.

தற்போது எரிபொருள் பெறுகின்ற செயற்பாட்டில் சில நபர்கள் தேவைக்கதிகமாக வெளியில் உயர்விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் எரிபொருளை தொடராக சேகரித்து வருகின்றனர்.இதனால் வரிசை தொடராக நீண்டு கொண்டே செல்கின்றது. எரிபொருள் பெறுவதற்கு கூப்பன் முறைமை செயற்படுத்தப்படும்போது எரிபொருள் பெறுவதில் ஒழுங்குமுறை ஏதோ ஒரு வகையில் பின்பற்றப்படும்.எனவே கூப்பன் முறையை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது கலந்து கொண்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

பொதுபோக்குவரத்துல் ஈடுபடும் தனியார் பேரூந்துகள், பாடசாலை போக்குவரத்து வேன்,பஸ்கள்(சிசு செரிய) வாகனங்களுக்கு திருகோணமலை பஸ் சாலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் எரிபொருள் அளவை அதிகரிக்க இதன்போது உரிய சாலை பொறுப்பதிகாரி இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

மீனவர்களின் மீன்பிடிக்கவசியமான எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது அரசாங்க அதிபர் பி்ரதேச செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள், திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரித்து நின்ற பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்து

east tamil

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவு நாள்

east tamil

திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

east tamil

அடம்பொடை மக்களின் கோரிக்கை

east tamil

திருகோணமலையில் தொழிற்சந்தை நிகழ்வு

east tamil

Leave a Comment