யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வின்போது இனப்படுகொலை இடம் பெற்றது தொடர்பாக கனடாவில் கனடிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதேச சபையில் வரவேற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கனடிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் அதற்கு நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அ.மதுசூதன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டுவந்து ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1