அவுஸ்திரேலியாவிற்கு கடல்மார்க்கமாக சென்ற 23 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.
இவர்கள் கடந்த மே மாதம் 27ஆம் திகதி வென்னப்புவ கொஸ்வாடிய பகுதியில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி சென்றுள்ளனர்.
நீர்கொழும்பு கொஸ்வாடிய மற்றும் மூதூர் பிரதேசங்களில் வசிப்பவர்களே கைதாகினர்.
இலங்கையர்கள் நேற்று இரவு கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று (20) அதிகாலை 3.50 மணியளவில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விசேட ASY-977 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
50 பேர் கொண்ட அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரும் விமானத்தில் பாதுகாப்பிற்காக வந்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.