கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுதித் தீர்மானத்தை எட்டுவது தொடர்பாக இன்று காலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1