Pagetamil
இலங்கை

‘இலங்கையில் வாழ முடியாது’: மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் இ தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 குழந்தை உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தீடை பகுதியில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவரது தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந் துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!