உலகிலேயே அதிக பச்சை குத்திய (டட்டூ) கின்னஸ் சாதனையாளராக விளங்குபவர் லக்கி டயமண்ட் ரிச். தனது கண் இமைகள், காது துவாரங்கள், பல் முரசுகள், கால்விரல்கள், ஆணுறுப்பின் நுனித் தோல் உள்ளிட்ட உடலின் சகல பாகங்களிலும் பச்சை குத்தியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல் “உலகின் அதிக பச்சை குத்திய மனிதர்” என்ற சாதனையை அவர் வைத்துள்ளார்
அவரது உடலில் ‘200%’ பச்சை குத்தப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அவரது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, இரண்டு முழுமையான அடுங்குகளில் பச்சை குத்தப்பட்டுள்ளதாக கின்னஸ் சாதனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் பச்சை குத்தப்படாத இடமேயில்லை.
ஆஸ்திரேலிய பழங்குடியினத்தை சேர்ந்த லக்கி டயமண்ட் ரிச், நியூசிலாந்தில் பிறந்தார். 16 வயதில் சர்க்கஸில் சேர்ந்தார்.
உடலில் பச்சை குத்தியதுடன் நில்லாமல், தனது பற்களின் வடிவத்தை மாற்றியது, கடுக்கன் அணிந்து காதின் நீளத்தை அதிகரிப்பதென மேலும் சில மாற்றங்களும் செய்துள்ளார்.